குழந்தை கண் முன்னே தாய் கூட்டுபாலியல் வன்கொடுமை - கத்தி முனையில் நடந்த கொடூரம்
கணவர், குழந்தை முன்னே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா பெண்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் 17 வயது சிறுமியை 7 கல்லூரி மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
வேலை பிடிக்காத நிலையில் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்து, திருப்பூர் ரயில் நிலையம் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பீகாரை சேர்ந்த 3 இளைஞர்கள், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்துள்ளனர்.
அதை நம்பிய இளம்பெண் கணவர் மற்றும் குழந்தைகளுடன் அந்த இளைஞர்களின் அறைக்கு சென்றுள்ளார். அங்கு கணவனை கட்டிப்போட்டு குழந்தையின் கண் எதிரே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நதீம், டானிஷ், முர்சித் ஆகிய 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.