காதலனை கழட்டிவிட்டு 54வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்

United States of America Marriage
By Sumathi Feb 24, 2023 07:28 AM GMT
Report

இளம்பெண் ஒருவர் தன்னை விட 24 வயது மூத்த நபரை திருமணம் செய்துள்ளார்.

காதலுக்கு வயதில்லை

அமெரிக்கா, மோரிஸ்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் அமண்டா கேனான்(30). இவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற இருந்தது.

காதலனை கழட்டிவிட்டு 54வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் | Young Woman Marry 54 Yo Man America

ஆனால், அமண்டா இந்த திருமணத்தை நிறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அமண்டா, "அந்த உறவில் நான் நானாக இருக்க முடியவில்லை. இது என்னை மோசமாக உணரவைத்தது. ஆகவே அதிலிருந்து மீண்டு வர நினைத்தேன். அதன் பிறகு ஏஸ் (54) என்பவரை சந்தித்தேன். பார்த்த உடனேயே அவரை பிடித்துப்போய்விட்டது.

முதியவருடன் திருமணம்

விரைவிலேயே இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்த கடந்த 2021 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. உண்மையில் காதலுக்கு வயது வித்தியாசம் கிடையாது. காதல் எப்படி இருந்தாலும் காதலாகவே இருக்கும். எங்களுடைய மனம் வெவ்வேறு காலங்களை சேர்ந்தது அவ்வளவு தான். காதல் எங்களை திருமணம் வரை அழைத்துச் சென்றது. ஏஸ்-க்கும் என்னுடைய தாயாருக்கும் ஒரே வயது.

ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. சில நேரங்களில் நாங்கள் தந்தை மகள் என சிலர் நினைத்துவிடுகிறார்கள். இது சகஜம் தான்.இப்படியான அனுபவங்கள் கிடைக்கும் என எனக்கு தெரியும்.

ஆனாலும் அவர்மீது நான் கொண்டுள்ள அன்பு மாறாது" எனவும் தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏஸ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.