ஏ.ஆர்.ரஹ்மான் மகளை திருமணம் செய்யும் நபர் யார் தெரியுமா? - ரசிகர்கள் அதிர்ச்சி
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை சமூக வலைத்தளம் மூலம் உறுதி செய்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல், விக்ரம் நடிக்கும் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதிக்கு ஏ.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என இரு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளான கதீஜா ரஹ்மானுக்கும் ஆடியோ இன்ஜினியர் ரியாஸ்தீன் ஷேக் முகமதுவுக்கும் கடந்த டிசம்பர் 29 அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் கதீஜா, எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதத்துடன், தொழில்முனைவோரும் விஸ்கிட் ஆடியோ இன்ஜினியருமான ரியாஸ்தீன் ஷேக் முகமதுடன் நடந்த எனது நிச்சயதார்த்தத்தை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது பிறந்தநாளான டிசம்பர் 29-ஆம் தேதி நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் அன்பானவர்கள் முன்னிலையில் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது என தெரிவித்துள்ளார்.
ஆடியோ இன்ஜினியரான ரியாஸ்தீன், பிரபல இசையமைப்பாளர்களிடம் பணி புரிந்துள்ளார். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’தமாஷா’ என்ற இந்தி திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லைவ் சவுண்ட் இன்ஜினியராகவும் பணியாற்றி வருகிறார். ஆக தன்னுடன் வேலைப்பார்த்த ரியாஸ்தீனையே ரஹ்மான் தனக்கு மருமகனாக்கி இருக்கிறார்
கதீஜா ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி ரஜினி நடித்த எந்திரன் படத்தில் இடம்பெற்ற புதிய மனிதா பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This