Instagram Liveல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
இன்ஸ்டாகிராம் லைவில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலம் ஜான்ஜ்கிர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் அங்கூர். 19 வயதாகும் இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை பதிவிட்டு பிரபலம் ஆனார். இதன் மூலம் இவருக்கென ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29 அன்று, இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்துள்ளார்.
அந்த நேரலையில் சுமார் 20க்கும் அதிகமானோர் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது இன்ஸ்டாகிராம் லைவ்வில் அங்கூர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிலர் அவர் இருந்த இடத்துக்கு நேரில் விரைந்தனர்.
அந்த ஒரே ஒரு Reel தான்..வீட்டில் சடலமாக கிடந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி!
ஆனால் அவர்கள் வருவதற்குள் அங்கூர் தூக்கில் தொங்கிய நிலையில் சலடமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அங்கூர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்டாகிராம்
இதனையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் அங்கூர் சத்தீஸ்கரில் உள்ள மிஸ்தா கிராமத்தில் வசிப்பவர் என்றும், அவரது பெற்றோர் ஐதராபாத்தில் தினசரி கூலித் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள் என்றும் தெரிய வந்தது.
மேலும் இவர் காதலில் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் பயன்படுத்திய தொலைப்பேசி கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.