10 லட்சத்திற்காக கொன்ற காதலன் - நம்பி ஏமாந்த காதலி!

Attempted Murder Crime Death
By Sumathi Jan 30, 2023 07:49 AM GMT
Report

பணத்திற்காக காதலியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

காதலன் மிரட்டல்

கிருஷ்ணகிரி, நெரிகம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. கூலித் தொழிலாளியான இவரது மகள் பெயர் பிரியங்கா(22). இவர் கடந்த சில மாதங்களாக ஓசூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

10 லட்சத்திற்காக கொன்ற காதலன் - நம்பி ஏமாந்த காதலி! | Young Woman Died By Lover Krishnagiri

இவர் முதுகுறுக்கி என்னும் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்கள் முன்பாக பிரியங்காவின் தந்தையான வெங்கடசாமியை போனில் தொடர்பு கொண்ட ஸ்ரீதர், மகளைக் கடத்தி விட்டோம் என்றும் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

காதலி கொலை

ஆனால் வெங்கடசாமி பணம் தர மறுத்துள்ளார். இதற்கிடையில் பகலூர் ராமன் தொட்டி வனப்பகுதி அருகே இளம்பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.

விசாரணையில் உயிரிழந்த பெண் பிரியங்கா என்பது தெரிய வந்தது. முன்னதாக, ஸ்ரீதர் மிரட்டுவது பற்றி பிரியங்காவின் தந்தையும் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதன் பின்னர், ஸ்ரீதரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் பிரியங்காவை வெளியே அழைத்துச் சென்று, அதன்பின் காதலியின் தந்தை வெங்கடசாமியிடம் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டும் மிரட்டியதாகவும், ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததன் காரணமாக காதலியை கொலை செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.