காதலியை சாலையில் கொடூரமாக தாக்கி விட்டுச்சென்ற காதலன் - திடுக்கிடும் வீடியோ!
காதலியை தாக்கி சாலையில் மயக்க நிலையில் காதலன் விட்டுச் சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரல் வீடியோ
ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். அந்த வீடியோவில் நபர் ஒருவர்
பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கி கீழே தள்ளி காலால் உதைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பலமாக தாக்கப்பட்ட அந்த பெண் மயக்கமடைந்தார். இதையடுத்து அந்த நபர் அந்த பெண்ணை அப்படியே சாலையில் விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கொடூர தாக்குதல்
வெகுநேரமாக மயங்கி கிடந்த பெண்ணை பார்த்து அந்தப் பகுதி மக்கள் புகாரளித்துள்ளனர். அதன் பின் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
इस राक्षस के ऊपर अब धारा बढ़ा दी गई हैं. पहले 151 तहत केस दर्ज था। लड़की के परिजनों ने केस दर्ज करवाने से मना कर दिया था। अब इसके ऊपर सुसंगत धारा में केस दर्ज कर लिया गया है। मामला मध्यप्रदेश के रीवा का है।@ChouhanShivraj @drnarottammisra @SP_Rewa pic.twitter.com/o2SjBIZsaw
— Shubham shukla (@ShubhamShuklaMP) December 24, 2022
அதனையடுத்து கொடூரமாக தாக்கிய நபரை கைது செய்துள்ளனர்.