காதலரை தாக்கி காதலி கூட்டு பாலியல் பலாத்காரம்- தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது
மைசூரில் காதலரை தாக்கி கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்து வருகிறார். கடந்த 25ம் தேதி அன்று மாலையில் அவரும், அவருடன் படிக்கும் காதலரும் காரில் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்திற்கு சென்றிருக்கின்றனர்.
மலை அடிவாரத்தில் இருக்கும் லலிதா திரிபுர பகுதிக்கு சென்ற அவர்கள் காரை நிறுத்திவிட்டு ரெண்டு பேரும் நெடுநேரமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் காரில் வருவதையும், காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்துக் கொண்டிருந்த 6 பேர் திடீரென்று வந்து காதலனை சரமாரியாக உருட்டுக்கட்டையால் அடித்து தாக்கி கீழே போட்டுவிட்டு மாணவியை தூக்கிக்கொண்டு புதருக்குள் சென்று விட்டனர்.
ஆறு பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டனர். பின்னர் காதலனின் தந்தைக்கு போன் செய்து, உடனே 3 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி வைக்கும்படி கேட்டு மிரட்டியிருக்கிறார்கள்.
இதனால் அந்த பெண்ணையும் காதலனையும் மேலும் அடித்திருக்கிறார்கள். இதில் இருவரும் மயங்கி விழுந்துவிட்டதால் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதனால் படுகாயமடைந்து தவித்து கொண்டிருந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க சிசிடிவி கேமரா ஆய்வுகளின்படி தேடி வந்த நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த 5 பேரை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.