காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த விக்ரம் பட பிரபலம்!

Tamil Cinema
By Sumathi Feb 14, 2023 03:30 PM GMT
Report

காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக மாஸ்டர் விக்ரம் பட பிரபலம் மீது இளம் பெண் புகாரளித்துள்ளார்.

விஷ்ணு இடவன்

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என மாஸ் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது, விஜய்யின் 67வது படமான லியோவை இயக்கி வருகிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த விக்ரம் பட பிரபலம்! | Young Woman Case On Lyricist Vishnu Edavan

இவருக்கு இணை இயக்குனராகவும், அவரது படங்களுக்கு பாடலாசிரியராகவும் பணியாற்றியவர் விஷ்ணு இடவன். மாஸ்டர் படத்தில் இடம்பெறும் பொளக்கட்டும் பற பற, விக்ரம் படத்தில் வந்த போர்கண்ட சிங்கம் மற்றும் நாயகன் மீண்டும் வரான் ஆகிய பாடல்களை எழுதியுள்ளார்.

பகீர் புகார்

இவர் இளம்பெண் ஒருவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.இருவரும் நெருக்கமாக பழகியதில் அந்த பெண் கர்ப்பமாகி இருக்கிறார்.அதனையடுத்து இரு குடும்பத்தினரும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்த நிலையில்,

இவரும் சம்மதம் தெரிவித்து பின் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.