காதலியை டார்ச்சர் செய்த முன்னாள் காதலன் -நள்ளிரவில் நண்பர்கள் செய்த கொடூர செயல்!
காதலியை டார்ச்சர் செய்து முன்னாள் காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலம், துர்க் பகுதியில் வசித்து வந்தவர் சேத்தன் . இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் இளம்பெண்ணின் தாயார் காவல் துறையில் பணியாற்றி வந்த நிலையில், சுர்குஜா மாவட்டத்துக்குப் பணி மாற்றம் கிடைத்தது. இதனால் அவர் குடும்பத்துடன் அந்த பகுதிக்குச் சென்றுவிட்டார். அப்போது லுகேஷ் சாஹு என்ற நபருடன் மீண்டும் காதல் கொண்டுள்ளார்.
இதனால் சேத்தனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி இளம் பெண் தன்னுடைய தாயுடன் துர்க் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது சேத்தன் பேசியுள்ளார். அதற்கு இளம்பெண் மறுத்ததால், அவரை ஆபாச வார்த்தைகளைத் திட்டியுள்ளார்.
காதலன் கொலை
இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த இளம் பெண் லுகேஷ் சாஹு யிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த லுகேஷ் பெண் வீட்டருகே உள்ள ஒரு இடத்திற்கு சேத்தனை வரவழைத்துள்ளார். லுகேஷ் தனது நண்பர்களுடன் அங்குச் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே லுகேஷ் கையில் வைத்திருந்த கட்டையைக் கொண்டு சேத்தனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சேத்தன் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.