15வயது மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை.. 27 வயது ஆசிரியை பள்ளியில் செய்த கொடூரம் - அதிர்ச்சி தகவல்!
10ம் வகுப்பு மாணவரைப் பெண் ஆசிரியர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் கஞ்ச்பெத் (வயது 27) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், அந்த பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மாணவருடன் பள்ளி வளாகத்திலும் ஆசிரியை நெருக்கம் காண்பித்து இருக்கிறார். இந்த சூழலில் சம்பத்தன்று 10ம் வகுப்பு மாணவரைத் தனியாக அழைத்து வந்துள்ளார். அப்போது அந்த மாணவரைப் பெண் ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பெண் ஆசிரியர்
இதனால் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்துள்ளார்.பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர் தனியாக அறையிலிருந்துள்ளார். இதனைக் கவனித்த பெற்றோர் மாணவரை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நேர்ந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் பெண் ஆசிரியரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.