இளநீர் கேட்ட கர்ப்பிணி மனைவி.. தென்னை மரம் ஏறிய கணவர் - நொடியில் நேர்ந்த பயங்கர சம்பவம்!

Cuddalore Crime Accident
By Vidhya Senthil Dec 30, 2024 08:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  இளநீர் கேட்ட கர்ப்பிணி மனைவிக்காகத் தென்னை மரம் ஏறிய கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் 

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் சென்னை உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.இவருக்கும் நீதிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நீதிகா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இளநீர் கேட்ட கர்ப்பிணி மனைவி

இதன் காரணமாகத் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் நீதிகாவை பார்ப்பதற்காக ஆனந்தராஜ் வார இறுதி விடுமுறைக்கு மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கர்ப்பிணி நீதிகா இளநீர் கேட்டுள்ளார். இதற்காக வீட்டின் பின் புறத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறியுள்ளார்.

ஜெபிப்பதற்கு அழைத்த மத போதகர்.. நம்பி சென்ற இளம் பெண் - கடைசியில் நேர்ந்த கொடூர சம்பவம்!

ஜெபிப்பதற்கு அழைத்த மத போதகர்.. நம்பி சென்ற இளம் பெண் - கடைசியில் நேர்ந்த கொடூர சம்பவம்!

அப்போது திடீரென கால் வழுக்கி மரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார்.ஆனால், கீழே விழுந்தபோது மரத்தின் பக்கத்தில் மின்ஒயரில் சிக்கி ஆனந்தராஜ் பலத்த காயம் அடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கத றி அழுந்தார்.

கர்ப்பிணி மனைவி

இந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஆனந்தராஜை மீட்டு இதில் மின்சாரம் தாக்கியதில், ஆனந்தராஜ் பலத்த காயமடைந்தார்.இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இளநீர் கேட்ட கர்ப்பிணி மனைவி

ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆனந்தராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இதனையடுத்து அவரது உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி மேற்கொண்டுவருகின்றனர்.