அடுத்தடுத்து மாயமான மணப்பெண்கள்.. கதறிய புதுமாப்பிள்ளை -விசாரணையில் பகீர் தகவல்!
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் மணப்பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மணப்பெண்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதான இளம்பெண். இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர் இளம்பெண்ணுக்கு வரன் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதற்காக இளம்பெண்ணுக்குச் சேலம் மாவட்டம் கே.ஆர். தோப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் பேசி நிச்சயம் செய்துள்ளனர். இதனையடுத்து, கடந்த 24 ஆம் தேதி அந்த இளம்பெண் திடீரென மாயமாகி உள்ளார்.
மேலும் இளம் பெண்ணைக் காணவில்லை எனப் பெற்றோர் அக்கம்பக்கத்தில் மற்றும் உறவினர் வீட்டில் தேடியுள்ளனர்.எங்குத் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாயமான சம்பவம்
மாப்பிள்ளை பிடிக்காததால் வீட்டை விட்டு மணப்பெண் ஓடிவிட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? காவல் துறையின் முழு விசாரணைக்குப் பிறகு தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர்.
அதே போல் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமணமான புதுமைப்பெண் ஒருவர் கணவர் கட்டிய தாலியைக் கழற்றி வீசிவிட்டு காதலனோடு தப்பிச் சென்று மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.