திருமணத்திற்கு முன்பே உல்லாசத்திற்கு அழைத்த மணமகன் - கடைசியில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
திருமணம் செய்துக்கொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமண வரன்
சென்னை மணலியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் தேடியுள்ளனர்.
எனவே, தங்களது மகளின் புகைப்படம், செல்போன் எண்ணுடன் சுய விவரங்களை பிரபல திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்த 28 வயதாகும் பூர்ணநாதன் என்பவர் பேசியுள்ளார். சென்னை மேற்கு மாம்பலத்தில் விடுதியில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
சிக்கிய இளைஞர்
இதனையடுத்து இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த நபர் பெண்ணை பார்ப்பதற்காக அழைத்துள்ளார். அதன்படி, பூர்ணநாதன் தங்கியிருந்த வீட்டுக்கு அந்த பெண் சென்றுள்ளார். அப்போது அவரிடம் தகாத முறையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துள்ளார். உடனே அந்த பெண் காவல்நிலையம் சென்று இதுகுறித்து புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பூர்ணநாதனை கைது செய்துள்ளனர்.