பள்ளியில் பயின்ற சிறுமிக்கு பிறந்த குழந்தை - அரசு பள்ளி ஆசிரியர் கொடூரம்

Pregnancy Sexual harassment Cuddalore Crime
By Sumathi Dec 19, 2024 12:28 PM GMT
Report

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவி கர்ப்பம்

கடலுார், சேத்தியாத்தோப்பு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற 17 வயது மாணவி ஒருவர், தற்போது சென்னையில் பி.எஸ்சி., நர்சிங் படிக்கிறார்.

பள்ளியில் பயின்ற சிறுமிக்கு பிறந்த குழந்தை - அரசு பள்ளி ஆசிரியர் கொடூரம் | Govt School Teacher For Student Pregnant

இந்நிலையில், அந்த மாணவிக்கு நான்கு நாட்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்,

மாணவியிடம் விசாரித்தபோது, மேல்நிலை பள்ளியில் படித்தபோது வேதியியல் ஆசிரியர் மலர் செல்வன் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

தம்பி மனைவியை 3 துண்டாக வெட்டி கொலை செய்த அண்ணன்- திடுக்கிடும் பின்னணி என்ன?

தம்பி மனைவியை 3 துண்டாக வெட்டி கொலை செய்த அண்ணன்- திடுக்கிடும் பின்னணி என்ன?

ஆசிரியர் கைது

உடனே, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் புடையூர் காலனியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் மலர்செல்வன், 50, பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

அரசு பள்ளி ஆசிரியர்

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியருக்கு திருமணமாகி, மனைவி, இரு பெண் குழந்தைகள், ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.