அரசு வேலைக்காக 2 சகோதரர்களை கொன்ற சகோதரி - சிக்கியது எப்படி?

Andhra Pradesh Murder
By Karthikraja Dec 18, 2024 01:01 PM GMT
Report

தந்தையின் அரசு வேலைக்காக தனது சகோதரர்களை பெண் கொலை செய்துள்ளார்.

தந்தை மரணம்

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், நகரிகல்லு பகுதியைச் சேர்ந்த பவுலிராஜு அங்குள்ள பழங்குடியினர் நலப் பள்ளியில் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 

andhra girl krishnaveni brother ramakrishna

இவருக்கு கிருஷ்ணவேனி(28) என்ற மகளும், ராமகிருஷ்ணா(26), கோபிகிருஷ்ணா(32) என இரு மகன்களும் உள்ளனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த பவுலிராஜு கடந்த ஜனவரி மாதம் காலமானார்.

சொத்து பிரச்சினை

இதையடுத்து பணிக்காலத்தில் உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் வாரிசுகளில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியம் உட்பட 40 லட்ச ரூபாய் பவுலிராஜுவின் பெயரில் இருந்துள்ளது. இதை பங்கு பிரித்து கொள்வதில் அவரது வாரிசுகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. 

andhra brother killed by siste for father property

திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் கிருஷ்ணவேனி தந்தையுடன் வசித்து வந்து, உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கவனித்துக் கொண்டதால், அவரது அரசு வேலை எனக்கே வேண்டும் என கிருஷ்ணவேனி கேட்டுள்ளார். அதற்கு இரு சகோதரர்களும் மறுப்பு தெரிவித்தையடுத்து மூவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

சகோதரர்கள் கொலை

சொத்து பிரச்னையை பேசி திர்த்துக் கொள்ளலாம் என கூறி கடந்த நவம்பர் 26 ஆம் தேதி, தனது சகோதரர் ராமகிருஷ்ணாவை கோரண்ட்லா கால்வாய் பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு அவரைஅளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து, துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

இதனையடுத்து அவரது உடலை கால்வாயில் தூக்கி போட்டுள்ளார். இதே போல் மற்றொரு சகோதரரான கோபிகிருஷ்ணாவையும் அதே போல் தனது வீட்டிற்கு வரவழைத்து கொன்று உடலை சாக்கடையில் வீசியுள்ளார்.

சிக்கியது எப்படி?

கோபிகிருஷ்ணா பந்தலமோடு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த நிலையில் சில நாட்களாக பணிக்கு வராத நிலையில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அதனையடுத்து, முப்பள்ளா அருகே உள்ள கால்வாயில் அழுகிய சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இது கோபி கிருஷ்ணாவின் உடல்தான் என அவரது மனைவி அடையாளம் காண்பித்துள்ளார். ஏற்கனவே குடும்பத்தில் சொத்து பிரச்சினை இருந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் கிருஷ்ணவேனியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் இரண்டு சகோதரர்களையும் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.