பஸ் ஸ்டாண்டில் இரவில் அவசரமாக பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர் - வைரல் சம்பவம்
பேருந்து நிலையத்தில் பெண்ணுக்கு இளைஞர் திடீரென தாலி கட்டிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
காதல் ஜோடி
திருப்பத்தூரில் உள்ள ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் ஒரு காதல் ஜோடி சுற்றித்திரிந்துள்ளனர். அப்போது பேருந்து நிலையத்தின் கழிவறையின் அருகே நிறுத்தி வைத்த தனியார் பேருந்து ஒன்றின் பின்புறம் சென்ற ஜோடி யாரும் வருகிறார்களா? என கவனித்துள்ளனர்.
அதன்பின் இளைஞன் தனது சட்டைபையில் இருந்து தாளி கயிற்றை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் கட்டியுள்ளார். தொடர்ந்து, இருவரும் கைகோர்த்து நடந்து சென்றதை அங்கிருந்த நபர் தனது கைபேசியில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
திடீர் திருமணம்
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, அதன் அடிப்படையில் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவ்வாறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.