திருமணமாகாத ஏக்கம்..இளைஞர் எடுத்த விபரீத முடிவு - கிராமத்தில் அரங்கேறிய கொடூரம்!
திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரை சேர்ந்தவர்கள் தாணுமாலய பெருமாள் -நாகம்மாள் தம்பதியினர். இந்த தம்பதிக்குத் திருமணமாகி மணிகண்டன் (வயது 38) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்குத் திருமணமான நிலையில், மணிகண்டன் டெம்போ டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த சூழலில் 38 வயதாகியும் தனக்குத் திருமணம் ஆகாத விரக்கித்தியில் மணிகண்டன் மதுக்குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் மணிகண்டன் வீட்டில் உள்ள படுக்கை அறைக்குத் தூங்குவதற்காகச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் வெளியே சென்ற தாய் வீடு திரும்பிய போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அப்போது நாகம்மாள் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
தற்கொலை
அப்போது மணிகண்டன் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாகம்மாள் கதறியழுதார். இந்த சம்பவம், குறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மணிகண்டன் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.