சூனியம் வைக்க GPay மூலம் ரூ. 21 லட்சம் அனுப்பிய சம்பவம் -விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
சூனியம் வைக்க கூகுள் பே மூலம் ரூ. 21 லட்சம் அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாந்திரீகம்
கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரகு. இவர் சென்னையில் தங்கி மாந்திரீக தொழில் செய்து வந்துள்ளார். தனது தொழிலைப் பிரபலப் படுத்த யூடியூப் சேனல் தொடங்கி அதில் மாந்திரீகம் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
இதனைப் பலரும் தொடர்ந்து வந்துள்ளனர். அதில் சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குச் சூனியம், செய்வினை வைப்பதற்குக் கூகுள் பே மூலம் பணம் பெற்று மாந்திரீகம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், பெரம்பலூர் துறை மங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணா என்பவர், மாந்திரீகர் ரகுவுக்கு அறிமுகமாகியுள்ளார்.
கூகுள் பே
அப்போது ரமேஷ் கிருஷ்ணா வீட்டின் அருகில் உள்ள முரசொலி மாறன் என்பவரை மாந்திரீகம் மூலம் கொல்வதற்காக சுமார் ரூ. 21 லட்சம் வரை கூகுள் பே மூலமாகப் பணம் அனுப்பி உள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த முரசொலி மாறன் அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரமேஷ் கிருஷ்ணா மற்றும் ரகுவை போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.