60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர் - கொடூர சம்பவம்!
60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனநலம் பாதிப்பு
தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே புதிய நீதிமன்றம் உள்ளது. அங்கு 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட சிலர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதனையடுத்து சம்பவ இடம் வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் அவர் பாலியல் வண்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சாஸ்திரி என்பது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீஸ் தரப்பில்,
பாலியல் வன்கொடுமை
60 வயது மனநல குறைபாடு கொண்ட பெண் ஒருவர் அண்மையில் காணாமல்போனார். இவரது உறவினர்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், இறந்துக் கிடந்தது காணாமல் போன பெண் என தெரிந்தது.
சாஸ்திரி என்ற இளைஞர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளில் அந்தப்பெண் கீழா விழுந்துள்ளார். அதில் தலையில் அடிப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
இதையறிந்த இளைஞர் தப்பியோடியுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.