முன்னாள் காதலி என நினைத்து..வேறொரு பெண்ணை கொன்ற இளைஞர் - நேர்ந்த கொடூரம்!

India Bengaluru Crime Murder
By Swetha Jul 26, 2024 08:30 AM GMT
Report

 முன்னாள் காதலி என நினைத்து வேறொரு பெண்ணை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் காதலி

பெங்களூரு, கோரமங்களா பகுதியில் ஒரு தனியார் பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. நள்ளிரவு வேளையில் அபிஷேக் என்ற இளைஞர் விடுதிக்குள் நுழைந்து பிஹாரைச் சேர்ந்த கிருத்தி குமாரி (24) என்ற பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

முன்னாள் காதலி என நினைத்து..வேறொரு பெண்ணை கொன்ற இளைஞர் - நேர்ந்த கொடூரம்! | Young Man Kills Women Mistaking His Ex Girlfriend

இதில் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனையடுத்து, அபிஷேக் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்த கொலை பற்றிய தகவலறிந்து வந்த போலீஸார் கிருத்தி குமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போன் திருடிய இளைஞர்..அடித்தே கொன்ற மக்கள் - பதைபதைக்கும் காட்சிகள்!

செல்போன் திருடிய இளைஞர்..அடித்தே கொன்ற மக்கள் - பதைபதைக்கும் காட்சிகள்!

கொன்ற இளைஞர்

இது குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட கிருத்தி குமாரிக்கும், அபிஷேக்குக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த அபிஷேக் அதே விடுதியில் தங்கியுள்ள வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

முன்னாள் காதலி என நினைத்து..வேறொரு பெண்ணை கொன்ற இளைஞர் - நேர்ந்த கொடூரம்! | Young Man Kills Women Mistaking His Ex Girlfriend

அபிஷேக்குக்கு வேலை கிடைக்காததால் அண்மையில் அவரை விட்டு அந்த பெண் விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் தனது முன்னாள் காதலியை கொல்வதற்காக அவர் தங்கியுள்ள விடுதியில் நுழைந்ததாகவும்,

அங்கு அவருக்கு பதில் தவறுதலாக கிருத்தி குமாரியை கொன்று விட்டு தப்பிச் சென்றதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அபிஷேக் மீது கோரமங்களா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.