காதலியை மார்பில் பச்சை குத்தக்கோரி காதலன் டார்ச்சர் - தட்டித் தூக்கிய போலீஸ்!
இளைஞர் ஒருவன் தனது காதலியை மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த கூறி தொல்லை கொடுத்துள்ளார்.
காதல் தொல்லை
கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்(28) ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணொருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ். சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அவ்வழியாக சென்று வரும் கல்லூரி மாணவிக்கும் இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து மாணவி எங்கு சென்றாலும் பின்தொடர்ந்துள்ளார்.
பச்சை குத்த வற்புறுத்தல்
மேலும் ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார். இந்நிலையில், மாணவி தன்னை உண்மையாக காதலிக்கிறாரா? என அறிந்து கொள்ள விரும்பிய இளைஞர், மாணவியின் மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த வற்புறுத்தியுள்ளார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத காதலி , காதலனின் போக்கை பார்த்து அச்சமடைந்துள்ளார். ஒருகட்டத்தில், தாங்கமுடியாமல் மாணவி இதுகுறித்து தனது வீட்டில் கூறியுள்ளார்.
போலீஸார் அதிர்ச்சி
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தந்தை மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இளைஞரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது அவரிடம் விசாரித்ததில் தான் மாணவியை காதலிப்பதாகவும் அவள் தனக்கு வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.