‘அந்த வலி மறக்க 6 மாதமானது...’ - ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த சமந்தா - வைரலாகும் வீடியோ

samantha interview divorce naga-chaitanya
By Nandhini Apr 18, 2022 11:52 AM GMT
Report

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், நடிகை சமந்தா, இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் பேசினார். அப்போது ரசிகர்கள் நடிகை சமந்தாவிடம் பல கேள்வி கேட்டனர். அவர்கள் எழுப்பிய ஏராளமான கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்தார்.

சமந்தா பேசியதாவது -

நான் முதன்முதலில் வாங்கிய சம்பளம் 500 ரூபாய் என்றும், பள்ளியில் படிக்கும்போதே நான் வேலைக்குச் சென்று சம்பாதித்தேன்.

தயவு செய்து எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் பச்சை குத்திக் கொள்ளாதீர்கள்.

நான் காது குத்திக் கொண்டபோது, எனக்கு அந்த வலி போக ஆறு மாதங்களானது. அதை எப்படி பொருத்துக் கொண்டேன் என எனக்கே தெரியவில்லை. மிகவும் வலித்தது இவ்வாறு நடிகை சமந்தா ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு கூலாக பதில் அளித்தார்.