போனை எடுக்காத காதலி.. விரக்தி அடைந்த காதலன்.. ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு!

Tamil nadu Madurai Crime Death
By Swetha Nov 30, 2024 01:30 PM GMT
Report

காதலி போனை எடுக்காததால் ஐடி ஊழியர் தற்கொலை செய்தது அதிர்ச்சி அளித்துள்ளது.

 ஐடி ஊழியர்

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் அருண் விஜய் (21). இவர் மதுரை பாண்டிகோயில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு பிசிஏ. 2-ம் ஆண்டு பயின்று வந்தார்.

போனை எடுக்காத காதலி.. விரக்தி அடைந்த காதலன்.. ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு! | Young Man Commits Suicide Over Fight Girlfriend

இந்த நிலையில், அருண் விஜய் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் கேரளாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் அது காதலாக மாறியது.

இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், இருவீட்டாரும் திருமணம் செய்து வைக்க ஒத்துக்கொண்டதால் கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.இதைத் தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசிக் கொண்டு வந்துள்ளனர்.

கல்லூரியின் 3 வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை - அதிர்ச்சி பின்னணி!

கல்லூரியின் 3 வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை - அதிர்ச்சி பின்னணி!

விபரீத முடிவு..

இந்த சூழலில், கடந்தவாரம் வீடியோ காலில் பேசிக்கொண்டு வந்தனர்.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் இணைப்பை துண்டித்த நிலையில்,

போனை எடுக்காத காதலி.. விரக்தி அடைந்த காதலன்.. ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு! | Young Man Commits Suicide Over Fight Girlfriend

சிறிது நேரத்தில் ஐஸ்வர்யாவை, அருண் விஜய் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர் போனை எடுக்காததால், மிரட்டுவதற்காக அருண்விஜய் தற்கொலைக்கு முயற்சிப்பதாக குறுந்தகவல் அனுப்பிநார்.

இதை பற்றி அறிந்த ஐஸ்வர்யா காதலனின் நண்பருக்கு தகவல் தெரிவித்தார். அவரது நண்பர்கள் அறைக்குச் சென்று பார்த்தபோது, அருண் விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.