இந்தம்மாவ மாத்துங்க..பானுப்ரியாவை அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ - அவரே சொன்ன தகவல்!
பானுப்ரியா தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
பானுப்ரியா
80ஸ்களில் கொடிகட்டிப் பறந்த நடிகை பானுப்ரியா. பெரிய கண்கள், நடிப்பு, நடனம் என ரசிகர்களை கட்டிப்போட்டவர். தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

திருமணம், குழந்தை என்றான பிறகு சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் இளம் ஹீரோ ஒருவரின் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஹீரோவுக்கும், பானுப்ரியாவுக்கும் காம்பினேஷன் காட்சிகள் அதிகம்.
கசப்பான அனுபவம்
அப்பொழுது வசனங்களை மறந்துவிட்டு தவித்திருக்கிறார். அதை பார்த்த அந்த ஹீரோ கடுப்பாகி, வசனத்தை மாத்துங்க இல்லை என்றால் இந்தம்மாவ மாத்துங்க என்றாராம். இது குறித்து பானுப்ரியா பேட்டி ஒன்றில் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த ஹீரோவின் பெயரை அவர் சொல்லவில்லை.
பானுப்ரியாவுக்கு தற்போது ஞாபக மறதி அதிகமாக உள்ளது. அதனால் வசனங்களை மனப்பாடம் செய்ய சிரமப்படுகிறார். இந்த காரணத்தால் நடிப்பை விட்டு விலக முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan