தூர போ.. கூப்பிட்டு அசிங்கப்படுத்திய நயன்தாரா - ஜிபி முத்து வேதனை!
நயன்தாராவின் படம் பார்க்க வந்தபோது நடந்த சம்பவம் குறித்து ஜிபி முத்து வேதனை தெரிவித்துள்ளார்.
ப்ரீமியர் ஷோ
நயன்தாராவின் 'கனெக்ட்' படத்தின் ப்ரீமியர் ஷோ அண்மையில் வெளியடப்பட்டது. இந்நிலையில் இந்த ஷோவிற்கு சென்று ஜிபி முத்து பாதியிலே வெளியேறினார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

“கனெக்ட் படத்தின் ஈவண்ட் நடத்தியவர்கள் என்னிடம் சொன்ன விதம் வேற, ஆனா அங்கு நடத்துன விதம் வேற. நயன்தாரா கூட உட்கார்ந்து படம் பார்க்கலாம் வாங்கனு கூப்பிட்டாங்க. ஆனா அங்கு கூப்பிட்டு போய் ஏதோ ஒரு ஓரமா உட்கார வச்சாங்க.
ஜிபி முத்து வேதனை
எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு. அதனால படம் பார்க்காமலேயே வெளிய வந்துட்டேன். இதெல்லாம் நயன்தாராவுக்கு தெரியாது. அவரது பவுன்சர்கள் என்னை ரொம்ப தரக்குறைவா பேசினாங்க. தூரபோனு சொல்லிட்டாங்க. இதனால் நான் அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன். பின்னர் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்னை போனில் அழைத்தார்.

பாதி தூரம் வந்துட்டேன், இன்னொரு முறை சந்திக்கலாம்னு சொல்லிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan