சன்னிலியோனுக்கு பால்கோவா ஊட்டி, டான்ஸ் - மாஸ் காட்டிய ஜிபி முத்து!

Sumathi
in பிரபலங்கள்Report this article
சன்னிலியோனுக்கு, ஜிபி முத்து பால்கோவா ஊட்டி, அவருடன் டான்ஸ் ஆடிய சம்பவத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜிபி முத்து
சன்னிலியோன் நடிப்பில் உருவாகு உள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இதில் ஜிபி முத்து கலந்துக் கொண்டார். அதில் இருவருக்கும் உரையாடல் ஒன்று நடைபெற்றது.
அப்போது எனக்கும் ஜிபி முத்துவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்திருக்கிறோம். எனக்கு அவரை பிடிக்கும் என சன்னி லியோன் கூறியுள்ளார். தொடர்ந்து ஜிபி முத்து, உங்களைப் பார்த்தது ரொம்ப சந்தோஷா இருக்கு.
சன்னி லியோன்
உங்க போட்டோவை பார்த்து நான் ஸ்வீட் கொடுத்தேன். தமிழ்நாட்டுல பால்கோவாங்கறது ரொம்ப பெரிய விஷயம். அதை உங்களுக்குத்தான் கொடுத்திருக்கிறேன். பால்கோவா மாதிரி ரொம்ப அழகா இருக்கீங்க என சன்னிலியோனிடம் கூறினார்.
அதனையடுத்து, ஜிபி.முத்து சன்னிலியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்டார். திரும்ப சன்னிலியோனும், ஜிபி முத்துவிற்கு ஊட்டிவிட்டார். அதன்பின் இருவரும் மேடையில் நடனம் ஆடினர். இதனை ரசிகர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.