கும்பமேளாவில் படு வைரலான இளம்பெண்; செல்ஃபி எடுக்க மொய்க்கும் கூட்டம் - யார் அவர்?
கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் இளம்பெண் ஒருவர் வைரலாகி வருகிறார்.
கும்பமேளா
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் கைகளால் செய்யப்படும் பாசி மாலையை விற்று வந்த இளம்பெண் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்தூரை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண் மோனாலிசா போஸ்லே. அவர் விற்கும் மாலையை வாங்குவோரின் எண்ணிக்கையைவிட, அவருடன் செல்பி மற்றும் வீடியோ எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
வைரலாகும் பெண்
அழகான கண்கள், கருமை நிறம், சிரித்த முகம், தன்னம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் காண்போரை கவர்ந்துள்ளது. இந்நிலையில், மக்கள் தனது மகளிடம் மாலைகளை வாங்குவதைவிட செல்பியே அதிகளவில் எடுப்பதாக கூறி,
Beauty is a gift from God. A beautiful lady was seen in Kumbh Mela, India, whom people are desperate to find and take selfies with.
— Suresh Kumar Jingar (@Sureshjaihind1) January 17, 2025
📹Natural Beauty of Indian Girl pic.twitter.com/E6XbdVdqHk
மோனாலிசாவின் தந்தை, அவரை இந்தூருக்கே திருப்பி அனுப்பியுள்ளார். மறுபுறம் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வான கும்பமேளாவில் ஒரு இளம்பெண்ணை பலரும் சுற்றி சுற்றி வந்து அவமரியாதை செய்வதாக விமர்சனங்களும் எழுந்துள்ளது.