மெரினா பீச்சில் அட்டூழியம்; வாலிபர்களுடன் இளம்பெண் செய்த காரியம் - முகம் சுளித்த பொதுமக்கள்!
மெரினா கடற்கரையில் மது அருந்தியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மெரினா கடற்கரை
சென்னை மெரினா கடற்கரையில் கோடை விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் இளம்பெண் ஒருவர் இளைஞர்களுடன் சேர்ந்து மெரினா கடற்கரையில் அரட்டையடித்துக் கொண்டு இருந்துள்ளார்.
உடனடியாக அங்கு கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது இளம்பெண் மற்றும் இளைஞர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.
எச்சரித்த போலீசார்
அவர்களுக்கு அருகில் காலி மதுபாட்டில்களும், நொறுக்கு தீனிகளும் இருந்துள்ளன. அவர்களின் செயல்பாடுகள் கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்தவர்களை முகம் சுளிக்க வைக்கும்படியாக இருந்தது.
இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது, டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்து கடற்கரையில் அமர்ந்து அருந்தியது தெரியவந்தது. இதையடுத்து தங்களது செயலுக்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதனால், அந்த இளம்பெண்ணையும், இளைஞர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.