வங்கி வேலையை விட்ட இளம்பெண் - அறை எடுத்து தங்கி செய்த காரியம்!
அறை எடுத்து தங்கிய இடத்தில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு சம்பவம்
உத்திர பிரதேச மாநிலத்தின் நொய்டா நகரை சேர்ந்த இளம்பெண் ஜெஸ்சி அகர்வால் (29). இவர் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றிய வந்துள்ளார். பின்னர் வங்கி வேலையை விட்டு பெங்களூருவில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார்.
அப்போது மற்ற அறைகளில் உள்ளவர்கள் ஏதேனும் வேலையாக வெளியே செல்லும்போது, அவர்களின் லேப்டாப் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடி வந்துள்ளார். இதனையடுத்து அந்த பொருட்களை தனது சொந்த ஊரில் உள்ள கள்ளச்சந்தையில் விற்றுள்ளார்.
இளம்பெண் கைது
பின்னர் மீண்டும் பெங்களூரு திரும்பி, வேறொரு பி.ஜி.யில் வாடகைக்கு அறை எடுத்து தங்குவார். அங்கேயும் தனது கைவரிசையை காட்டுவார். திருட்டு தொழிலில் கவனம் செலுத்திய அவருக்கு நல்ல வருவாய் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்த புகார் போலீசாருக்கு சென்றதை அடுத்து, தீவிர விசாரணை நடத்தினர். அதில் ஜெஸ்சி அகர்வால் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்த போலீசார் ஜெஸ்சி அகர்வாலை கைது செய்தனர்.