பாலியல் உறவு..காதலனின் செயலால் நேர்ந்த விபரீதம் - ரத்த வெள்ளத்தில் பெண் உயிரிழப்பு!

Gujarat India Death
By Swetha Oct 01, 2024 12:30 PM GMT
Report

காதலனுடனான பாலியல் உறவில் இளம்பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் உறவு..

குஜராத்தின் நவ்சரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது நர்சிங் பட்டதாரி மாணவி ஒருவர் தனது 26 வயது காதலனுடன் ஹோட்டல் அறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

பாலியல் உறவு..காதலனின் செயலால் நேர்ந்த விபரீதம் - ரத்த வெள்ளத்தில் பெண் உயிரிழப்பு! | Young Girl Died After Having Sex With Boyfriend

பாலியல் உறவுக்கு பின்னர் பெண்ணின் பிறப்புறுப்பில் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பெண்ணும் அவரது காதலனும் என்ன செய்வது எனத் தெரியாமல் பயத்தில் திகைத்துள்ளனர்.

பதற்றத்தில் பெண்ணின் காதலன் ஆம்புலன்சை அழைக்காமல் ரத்தப்போக்கை நிறுத்துவது எப்படி என்று ஆன்லைனில் தேடி பெண்ணின் உறுப்பில் ரத்தம் வராமல் இருக்க துணியை அழுத்தி ரத்தத்தை தடுக்க முயன்றுள்ளார்.

புதுமண தம்பதி; பாலியல் உறவுக்கு மறுத்த மனைவி - ஆசை கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

புதுமண தம்பதி; பாலியல் உறவுக்கு மறுத்த மனைவி - ஆசை கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நேர்ந்த விபரீதம்

ஆனால் சிறிது நேர்த்திலேயே பெண் மயக்கமடைந்த நிலையில் காதலன் தனது நண்பனுக்கு போன் செய்து அவனை வரவைத்து அவனுடன் சேர்ந்து பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

பாலியல் உறவு..காதலனின் செயலால் நேர்ந்த விபரீதம் - ரத்த வெள்ளத்தில் பெண் உயிரிழப்பு! | Young Girl Died After Having Sex With Boyfriend

அங்கு அவர்களை அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதற்கிடையில் அந்த பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பெற்றோர்களிடம் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் காதலன் முதலிலேயே ஆம்புலன்சுக்கு போன் செய்யாமல் ஆன்லைனில் உபாயம் தேடிக்கொண்டிருந்ததாலேயே பெண் உயிரிழந்துள்ளார். எனவே உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.