பல ஆண்களுடன் திருமணம் - நகை, பணத்துடன் 6வது நபரோடு சிக்கிய இளம்பெண்!
பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 திருமணம்
நீலகிரி, கோத்தகிரியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (25). இவர் சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி, திருமணம் செய்துள்ளார். இருவரும் 28 நாட்களே ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.
பின் தன் சொந்த ஊருக்கு சென்று சொத்து சம்பந்தமான பிரச்சினையை சரிசெய்து விட்டு வருவதாக கூறி சென்ற பெண் திரும்ப வரவில்லை. மணிகண்டன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோதும் வருவதாக கூறிவிட்டு வரவில்லை.
பெண் மோசடி
அதனைத் தொடர்ந்து, மனைவி 8 பவுன் நகை மற்றும் 1 லட்சம் பணம் ஆகியவற்றை கொண்டு சென்றதாக மணிகண்டன் போலீஸில் புகாரளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரித்ததில் மகாலட்சுமி முதன் முதலில் வேலூரில் ஒருவரை இதே பாணியில் திருமணம் செய்துகொண்டு தலைமறைவானதும்,
அதன்பின் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது. தற்போது, 5வது மணிகண்டனை திருமணம் செய்துகொண்டு நகை, பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
அதனையடுத்து, கோயமுத்தூர் விமான நிலையம் அருகே சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வரும் சின்ராஜ் என்பவரை 6-வதாக திருமணம் செய்து கொண்டு வசித்து வந்த மகாலட்சுமியை கைது செய்துள்ளனர்.