உல்லாசத்திற்கு அழைத்த இளம்பெண் - ஆசையாய் சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்!
பெண் ஒருவர் ஆசிரியரை உல்லாசத்திற்கு அழைத்து அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
இளம்பெண்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் விக்டர் (49). இவர் கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து கடந்த 8 ஆண்டுகளாக , அதே பகுதியில் வீடு வாடகை எடுத்த தங்கி வருகிறார்.
இந்த சூழலில், விக்டருக்கும், அரியலூராய் சேர்ந்த ஜனனிக்கும்(21) பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏழ்மையில் இருந்த அந்த பெண்ணின் குடும்பத்துக்கு விக்டர் பண உதவி செய்துள்ளார். இந்த நிலையில், ஜனனி தனது குடும்பத்துடன் குறிஞ்சிப்பாடிக்கு குடியேறினர். அங்கு விக்டரும் அந்த பெண்ணும் அவ்வப்போது உல்லாசமாய் இருந்து வந்துள்ளனர்.
இந்த சமயத்தில், ஜனனிக்கு வேறு ஒரு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அறிந்த விக்டர், அந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது இல்லையென்றால் உல்லாசமாய் இருந்ததை வெளியில் சொல்லின் விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பதறிய ஜனனி தனது உறவினரான தட்சிணாமூர்த்தி (22) என்பவரிடம் இது குறித்து கூறினார்.
ஆசிரியர்
இருவரும் சேர்ந்து விக்டரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி, ஜனனி விக்டரை உல்லாசத்திற்கு அழைத்து இருவரும் தனிமையில் இருந்தபோது பதுங்கி இருந்த தட்சிணாமூர்த்தி இரும்பு கம்பியால் விக்டரை அடித்துக்கொலை செய்ததாக தெரிகிறது.
பின்னர் அவரது உடலை 2 பேரும் சேர்ந்து சாக்கு மூட்டையில் கட்டி மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்று நெய்வேலி வேலுடையான்பட்டு பகுதியில் முட்புதரில் வீசிவிட்டு திரும்பி வந்துள்ளனர். இதனையடுத்து அவருடன் தங்கி இருந்த சக ஆசிரியர், கடந்த மாதம் முதலே விக்டர் காணவில்லை எனவும்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் அவரது தாய் பாத்திமாமேரியிடம் கூறினார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான விக்டரை தேடி வந்தனர்.அப்போது விசாரணையில், தட்சிணாமூர்த்தி, விக்டரின் உடலை வீசிய இடத்தை போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.
அங்கு எலும்புகூடாக இருந்த விக்டர் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார், விக்டர் காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி தட்சிணாமூர்த்தி, ஜனனி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.