தகாத உறவில் உல்லாசம்; இடையூறாக இருந்த 6 வயது சிறுமி துடிதுடிக்க கொலை - நடந்தது என்ன?
கள்ளக்காதலில் இடையூறாக இருந்ததால் 6 வயது சிறுமி கொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் திவ்யா (31). இவருக்கு விஜயகாந்த் என்பவருடன் திருமணமாகி 9 வயதில் மகனும், 6 வயதில் தேஜஸ்வி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து திவ்யா புழல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இச்சுழலில், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த திவ்யாவுக்கு அவருடன் பணியாற்றி வந்த சீனிவாசன் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
சிறுமி கொலை
ஆனால், இவர்கள் உல்லாசமாக இருப்பதற்கு சிறுமி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமி தேஜஸ்வியை பாசமாக குளிக்க வைப்பதற்காக சீனிவாசன் குளியல் அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில், சிறுமி மயங்கி விட்டதாக கூறியபடி தனது தோளில் சிறுமியை போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். ஆனால் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுமியின் மரணத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் சீனிவாசன் மற்றும் திவ்யா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் சிறுமி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தெரியவரும்.