மனைவியுடன் தகாத உறவில் இருந்த நண்பன், சரமாரியாக வெட்டி வீசிய நபர் - கொடூர கொலை!
ஒருவர் தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை வெட்டியா சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள கிருஷ்ணம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (36). இவர் அப்பகுதியில் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39), இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர்கள் இருவரும் நண்பர்கள், அதனால் வீட்டிற்கு அவரது நண்பர் அடிக்கடி சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கும் ஜெயபிரகாஷின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அவரது கணவர் பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் அவனது நண்பர் விடாமல் அவரது மனைவியுடன் நெருங்கி பழகியுள்ளார்.
கொலை
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போடி பரமசிவன் கோவில் தெருவில் குடியேறினர். அப்பொழுதும் கருப்பசாமி இவரது மனைவியிடம் பழகுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ் அவரை கொலை செய்ய முடிவு செய்தார். பின்னர், நேற்று முன்தினம் இரவு ஜெயபிரகாஷ் அவரது நண்பரை அழைத்துள்ளார், பின்னர் இருவரும் நேரில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது, இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து கருப்பசாமியின் உடலில் சரமாரியாக வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை பார்த்த அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்பொழுது அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் போடி ஜெயபிரகாஷ் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார்.