தகாத உறவா? சந்தேகத்தில் 65 வயது மனைவி மீது ஆசிட் வீசிய 75 வயது கணவன்
முதியவர் ஒருவர் தனது மனைவி மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேகம்
மும்பை அருகே உள்ள வடலா பகுதியைச் சேர்ந்தவர் 75 வயது முதியவர். இவர் தனது 65 வயது மனைவியுடன் வசித்து வந்தார். இதனிடையே, முதியவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே மீண்டும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆசிட் வீச்சு
அப்போது தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட முதியவர் வீட்டில் இருந்த ஆசிட்டை மனைவியின் முகத்தில் வீசியுள்ளார். இதனால், மனைவி முகத்தில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் முதியவரை கைது செய்தனர். இதில் காயமடைந்த மனைவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார்.