கணவன் - மனைவி எனக்கூறி OYO வில் அறை எடுத்த இளம்ஜோடி - காத்திருந்த அதிர்ச்சி!
பிரபல விடுதியில் இளம் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா
ஹரியானா மாநிலத்தை சேந்தவர் மோஹித் அவானா.இவர் பால் விற்பனையாளராக உள்ளார் . இவருக்கும் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்து வரும் தனுவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறி ஒரு கட்டத்தில் தகாத உறவாக மாறியுள்ளது.
இந்த நிலையில் மோஹித்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது.திருமணத்திற்குப் பிறகு தனுவுடன் பழகி வந்துள்ளார் . இதனையறிந்த மோஹித் வீட்டார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
பிரபல விடுதி
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபத்தில் உள்ள ஒரு Oyo விடுதியில், கணவன் மனைவி எனக்கூறி இருவரும் சேர்ந்து அறை எடுத்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் விடுதி ஊழியர் அறையை உடைந்து பார்த்துள்ளார் .
அறையில் மோஹித் மற்றும் தனு சடலமாகக் கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இருவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.