ஆசையாய் கேட்ட மனைவி; மறுத்த கணவன் - அடுத்தடுத்து புதுமணத் தம்பதி விபரீத முடிவு!

Death Vellore
By Sumathi Mar 05, 2024 05:00 AM GMT
Report

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குடும்ப விவகாரம்

வேலூர், திப்பசமுத்திரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களின் மகன் பூவரசன்(26). டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.

aishwarya - poovarasan

தொடர்ந்து, கழனிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (25) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், பூவரசனின் பெற்றோர் வெளியூருக்கு சென்றிந்த நிலையில், ஐஸ்வர்யா உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியே அழைத்துச் செல்லுமாறு கணவனைக் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வெளியே சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

கழிவறையில் இறந்து கிடந்த இளம் ஜோடிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி

கழிவறையில் இறந்து கிடந்த இளம் ஜோடிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி

தற்கொலை 

அதன்பின் வீடு திரும்பிய பூவரசன் ஜன்னல் வழியாக பார்த்ததில் ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த கணவன் மருத்துவமனை கழிவறைக்கு சென்று அங்கிருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆசையாய் கேட்ட மனைவி; மறுத்த கணவன் - அடுத்தடுத்து புதுமணத் தம்பதி விபரீத முடிவு! | Young Couple Committed Suicide In Vellore

இதனைக் கண்டு அதிர்ச்சியான உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.