இது புதுசா இருக்கே.. ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி- இப்படி ஒரு காரணமா?

Viral Video India Chhattisgarh
By Swetha Nov 29, 2024 10:00 AM GMT
Report

இளம் ஜோடி ஹெல்மெட்டை மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சயதார்த்தம் 

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் கரியா தோலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த திரேந்திர சாகு என்ற நபர் ஜோதி சாகு என்ற பெண்ணை கடந்த வாரம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அப்போது இருவரும் பரஸ்பரமாக மோதிரம் மாற்றிகொண்டனர்.

இது புதுசா இருக்கே.. ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி- இப்படி ஒரு காரணமா? | Young Couple Changed Helmet In Engagement Ceremony

அதன் பிறகு திடீரென ஹெல்மெட்டையும் மாற்றினார்கள். இந்தை பார்த்த அங்கிருந்த மக்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிறகு இளம் தம்பதிகளிடம் இது குறித்து கேட்டப்போது,

அவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்வதற்காக இந்த செயலில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர். அதாவது, மாபிள்ளை பிரேந்திர சாகுவின் தந்தை பஞ்சுராம் சாகு என்பவர் பஞ்சாயத்து செயலாளராக இருந்து வந்துள்ளார்.

மாலையில் ஒருவருடன் நிச்சயதார்த்தம் - இரவில் காதலனுடன் இளம்பெண்..ஷாக் சம்பவம்!

மாலையில் ஒருவருடன் நிச்சயதார்த்தம் - இரவில் காதலனுடன் இளம்பெண்..ஷாக் சம்பவம்!

ஹெல்மெட் 

ஒருமுறை வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் திரும்பி வந்துக்கொண்டு இருந்தார் அப்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை. அந்த சமயம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பஞ்ச்ராம்சாகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது புதுசா இருக்கே.. ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி- இப்படி ஒரு காரணமா? | Young Couple Changed Helmet In Engagement Ceremony

இது அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது. இதன் பிறகு, பஞ்ச்ராமின் குடும்பத்தினர் தொடர்ந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகதான் பஞ்சுராமின் மகன் பிரேந்திர தனது நிச்சயதார்த்தத்தில் இதை செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஹெல்மெட் வழங்கியுள்ளனர். தற்போது இந்த ஹெல்மெட் நிச்சயதார்த்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இளம்ஜோடிகளில் செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.