இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் செய்த செயல் - நெகிழ்ச்சியில் மக்கள்!
கேரளா வயநாடு நிலச்சரிவால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவும் வகையில் தனது பங்காக ரூ.10 லட்சத்தை நிவாரண நிதியாக இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் அளித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவு
கேரளாவில் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணிலன் புதைந்தனர். இந்த நிலச்சரிவால் 400 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 1200க்கும் மேற்பட்டோர், தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 200 க்கும் மேற்பட்டவர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
கிராண்ட் மாஸ்டர் குகேஷ்
இந்த நிலச்சரிவால் வயநாட்டை சேர்ந்த ஏராளமான மக்கள், தற்போது தங்களின் உடமை, உறவு, வீடு போன்றவற்றை பறிகொடுத்துள்ள நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அரசியல் கட்சி தலைவர்கள் , தொழிலதிபர்கள் , திரை பிரபலங்கள் என நிதிஉதவி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கேரளா வயநாடு நிலச்சரிவால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவும் வகையில் தனது பங்காக ரூ.10 லட்சத்தை நிவாரண நிதியாக இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் அளித்துள்ளார்.