கேரளா வயநாடு துயரம்..நேரில் இன்று ஆய்வு மேற்கொள்ளும் பிரதமர் மோடி!!
கேரளா மாநிலத்தில் நடைபெற்ற நிலச்சரிவு பெறும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
நிலச்சரிவு
ஜூலை 30 அன்று வயநாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி 226 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 3 கிராமங்கள் மொத்தமாக புதைந்து போயுள்ளது. 130 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பல தரப்பில் இருந்தும் வயநாட்டிற்கு உதவி கரங்கள் நீட்டப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை வயநாடு விரைகிறார். மதியம் 12 மணியளவில் வயநாடு செல்லும் அவர், அங்கு பாதிக்கப்பட்ட இடங்களையும், அங்கு நடைபெறும் மீட்புப்பணிகளையும் ஆய்வு செய்கிறார்.
நிலச்சரிவு வரும்..அனைத்தையும் மூழ்கடிக்கும் - ஒரு வருடத்திற்கு முன்பே எழுதிய சூரல்மலா 8-ஆம் வகுப்பு மாணவி
ஆய்வு
தொடர்ந்து, நிவாரண முகாம் மற்றும் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தரவிருக்கும் பிரதமர் மோடி,அதன்பிறகு பிரதமர் ஒரு ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார் என தகவல் வெளிவந்துள்ளது.
முன்னதாக, 2 நாட்களுக்கு முன்பு, கேரள முதல்வர் பினராயி விஜயன் காணாமல் போனவர்களை குறித்து பேசுகையில், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான கடைசி முயற்சியாக உறவினர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மற்ற அனைத்து வழிகளும் தீர்ந்துவிட்டன என கூறினார்.