நிலச்சரிவு வரும்..அனைத்தையும் மூழ்கடிக்கும் - ஒரு வருடத்திற்கு முன்பே எழுதிய சூரல்மலா 8-ஆம் வகுப்பு மாணவி
வயநாடு நிலச்சரிவு ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்து போகும் நிலையில், நிகழ்ந்துள்ளது கேரளாவின் வயநாடு நிலச்சரிவு.
நிலச்சரிவு
4-வது நாளாக இன்றும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், பலி எண்ணிக்கை என்பது 340'ஐ கடந்துள்ளது. இன்னும் 200 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை.
பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவத்தினர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் தான், 8-ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து கதை ஒன்றை எழுதியுள்ளது தொடர்பான செய்திகள் வெளிவந்துள்ளது.
எழுதிய மாணவி
இதனை அதிர்ச்சி என்பதா? ஆச்சரியம் என்பதா என்றே விவரிக்க முடியாத நிலை இது. பள்ளி மாணவியின் கதையில், கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 300 பேர் இறந்தார்கள் என்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது பற்றி எழுதப்பட்டுள்ளது.
மழை பெய்தால், நிலச்சரிவுகள் அருவியைத் தாக்கும், மனித உயிர்கள் உட்பட அவர்களின் பாதையில் உள்ள அனைத்தையும் அது மூழ்கடிக்கும் என்றும் அந்த 8 ஆம் வகுப்பு மாணவி கடந்த ஆண்டு தனது பள்ளி இதழில் எழுதிய கதையில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் வருடம் கழித்து, அம்மாணவி நகரமான சூரல்மலை தரைமட்டமாக்கியது. மேலும், அவரது பள்ளி - சூரல்மலா வெள்ளர்மலையில் உள்ள அரசு தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளி - முற்றிலும் இடிபாடுகளுக்குள் புதைந்துவிட்டது.