வயநாட்டில் ராகுல் காந்தி...பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல்!!

Rahul Gandhi Kerala India
By Karthick Aug 01, 2024 11:12 AM GMT
Report

வயநாடு

இது வரை இல்லாத பெரிய ஆபத்தை சந்தித்துள்ளது. வயநாடு கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியாவையே உலுக்கியுள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை என்பது 288'ஐ எட்டியுள்ளது.

Kerala wayand

3 கிராமங்கள் இருந்த அடையாளமே தெரியாத சூழலில், இன்னும் 1000'க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்றே தெரியதா சூழல் உள்ளது. பேரிடர் மீட்பு, கேரளா பேரிடர் மீட்பு, ராணுவத்தினர் உட்பட பொதுமக்கள் தனியார் அமைப்புகள் என பலரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

ராகுல் காந்தி

இரு முறை வயநாட்டில் இருந்து வேட்பாளராக தேர்வாகிய ராகுல் காந்தி, இம்முறை அமேதி தொகுதியை தக்கவைத்து கொண்டு வயநாட்டில் இருந்து ராஜினாமா செய்தார். தற்போது பேரிழப்பை வயநாடு, சந்தித்துள்ள நிலையில், நேரில் வந்து பார்வையிட்டுள்ளார் எம்.பி ராகுல் காந்தி.

வயநாட்டை தொடர்ந்து நீலகிரிக்கும் நிலச்சரிவு எச்சரிக்கை - பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

வயநாட்டை தொடர்ந்து நீலகிரிக்கும் நிலச்சரிவு எச்சரிக்கை - பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

அவருடன் வயநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியும் வருகை தந்துள்ளார்.

rahul gandhi and priyanka gandhi in wayanad

பெறும் பாதிப்பை எதிர்கொண்ட சூரல்மாலையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிவாரண முகாம் மற்றும் மருத்துவமனைகளில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, மீட்பு பணிகளையும் பார்வையிட்டனர்.