வயநாட்டை தொடர்ந்து நீலகிரிக்கும் நிலச்சரிவு எச்சரிக்கை - பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!
வயநாட்டை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கும் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியாவையே உலுக்கியுள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை என்பது 273'ஐ கடந்துள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பலதரப்பில் இருந்தும் வயநாட்டிற்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
தொடர்ந்து நீலகிரி மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நீலகிரி மாவட்ட பகுதிகளிலும் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், அடுத்த ஒரு வாரத்திற்கு பொதுமக்கள், நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.