தடமயமே இல்லாமல் போன கிராமம்..ஆற்றில் அடித்து வரப்பட்ட 31 உடல்கள்!!2-வது தொடரும் மீட்புப்பணிகள்
தொடர் மழையின் காரணமாக, கேரளாவின் வயநாட்டில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. காற்றாற்று வெள்ளத்துடன் அடித்துவரப்பட்ட ராட்சத பாறைகள், மரங்கள் போன்றவற்றின் அடியில் 3 கிராமங்கள் சிக்கியுள்ளன.
பல நூறு வீடுகள் இருந்த தடயமே தெரியாத அளவிற்கு புதைந்துவிட்டன. நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிர் சேதம் அதிகரிக்கும் அச்சம் உள்ளது. 1000'திற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
கேரளா வயநாட்டில் அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் - மண்ணில் புதைந்த 100'க்கும் மேற்பட்டோர் - 20 உடல்கள் மீட்பு!!
சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், 1000'திற்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்று சாலியாற்றில் உயிரிழந்த 31 பேரின் உடல்கள் மிதந்து வந்ததால் பெரும் அதிர்ச்சியை மீட்பப்படையினருக்கு அளித்துள்ளது.
மலப்புரத்தில் இருட்டுக்குத்தி, பொதுக்கல்லு ஆகிய இடங்களில் இருந்து ஆற்றில் அடித்து வரப்பட்ட 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மொத்தமாக தற்போது வரை பாலி எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.
2-ஆம் நாளாக இன்றும் மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், கேரளா மீட்பு படையினர், ராணுவத்தினர் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.