ஆபாச வீடியோக்கள்; சிக்கிய இன்ஸ்டா புகழ் இன்பா - இரவோடு இரவாக கைது!
சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக வீடியோ வெளியிட்ட இன்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்பா
புதுக்கோட்டை, அறந்தாங்கியைச் சேர்ந்தவர் இன்பா. இன்பா டிராக் என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.
இவர் சமீபத்தில் ட்விட்டரில் போட்ட வீடியோதான் சர்ச்சையானது. அதில் அதிகமான ஆபாச வசனங்கள் இருந்தது. அதை தாண்டி குழந்தைகளை பாலியல் தேவைக்கு பயன்படுத்துவது பற்றியும் இருந்தது. மோனோ ஆக்டிங் முறையில், ஆடியோ எதுவும் இல்லாமல் சப் டைட்டில் மட்டும் வைத்து முகத்தில் ரியாக்சன் மட்டும் கொடுத்து வீடியோ வெளியிடுவதே இவரின் வழக்கம்.
கைது
இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் புகார் கொடுத்தார். இவரது வீடியோக்களைப் பார்க்கக் கூடிய குழந்தைகள், பெண்கள்; மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இடையே பாலியல் தொடர்பான எண்ணங்கள் ஏற்பட்டு பாலியல் குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதாலும்,
இதனால் இளைஞர் சமூதாயத்திற்கு சீர்கேடு ஏற்படும் வகையிலும், மேலும் பெண்களின் நாகரீகத்தை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். புகாரின் அடிப்படையில், இன்பா கைது செய்யப்பட்டுள்ளார்.