பறக்கும் விமானத்தில் பணிப்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த நபர் - மகளிர் ஆணையம் அதிரடி!

Delhi Sexual harassment Crime
By Vinothini Aug 19, 2023 08:39 AM GMT
Report

விமானத்தில் செல்லும்பொழுது பணிப்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாசப்படம்

கடந்த 2ம் தேதி டெல்லியில் இருந்து மும்பை நோக்கி ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்படது. இந்த விமானம் நடு வானில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு இருந்த பயணி ஒருவர் தன் அருகில் இருந்த பெண் பயணி மற்றும் விமான பணிப்பெண்களை செல்போனில் ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

man-took-bad-pictures-of-air-hosters-in-flight

இதனை அறிந்த சக பயணிகள் அந்த நபரை கண்டித்துள்ளனர், அவரது செல்போனை வாங்கி பார்த்ததில் அவர் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து தெரிந்தது.

மகளிர் ஆணையம்

இந்நிலையில், அவரது மொபைல் போனில் பணிப்பெண்கள் மற்றும் சக பெண்களை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை நீக்கிய விமான ஊழியர்கள் இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், மும்பை சென்றதும் அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

man-took-bad-pictures-of-air-hosters-in-flight

அப்பொழுது அந்த நபர் தான் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார், பின்னர் அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து டெல்லியில் உள்ள மகளிர் ஆணையம் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.