Tuesday, May 13, 2025

பாகிஸ்தானுக்கு போங்க..! ரசிகரிடம் ஏன் இப்படி சொன்னார் தோனி? - வைரலாகும் Video!

MS Dhoni Chennai Super Kings Cricket India Indian Cricket Team
By Jiyath a year ago
Report

தனது ரசிகர் ஒருவரிடம் உணவு குறித்து தோனி பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

எம்.எஸ்.தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு போங்க..! ரசிகரிடம் ஏன் இப்படி சொன்னார் தோனி? - வைரலாகும் Video! | You Should Go To Pakisthan Says Ms Dhoni

கடந்த 2020ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி. ஆனால் ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நண்பர்கள், குடும்பத்தினருடன் நாடு முழுவதும் பயணம் சென்று தனது பொன்னான நேரத்தை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் தோனியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

என் மனைவியை.. மனிதர்களாக நடந்து கொள்ளுங்கள் - இந்திய ரசிகர்களால் வேதனையில் ஷம்சி!

என் மனைவியை.. மனிதர்களாக நடந்து கொள்ளுங்கள் - இந்திய ரசிகர்களால் வேதனையில் ஷம்சி!

வைரலாகும் வீடியோ 

அதில் ரசிகர் ஒருவர் தோனியிடம், உணவு குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது தோனி "நீங்கள் பாகிஸ்தானுக்கு போய் பாருங்கள். அங்கு உணவு மிகவும் சுவையானதாக இருக்கும்" என்றார்.

பாகிஸ்தானுக்கு போங்க..! ரசிகரிடம் ஏன் இப்படி சொன்னார் தோனி? - வைரலாகும் Video! | You Should Go To Pakisthan Says Ms Dhoni

அதற்கு அந்த ரசிகர் "நீங்கள் நல்ல உணவு இருக்கிறது என்று கூறினால் கூட நான் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டேன். எனக்கு உணவு என்பது மிகவும் பிடிக்கும்.

அதற்காக நான் பாகிஸ்தானுக்கெல்லாம் செல்ல மாட்டேன் என்று கூறுகிறார். இந்த பதிலை கேட்டவுடன் தோனி சிரித்தபடியே அமைதியாகிவிடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.