இனி ட்விட்டரில் வீடியோ கால் செய்யலாம் - புதிய அப்டேட் கொடுத்து அசத்தும் எலான் மஸ்க்..!

Twitter Elon Musk
By Thahir May 10, 2023 10:02 AM GMT
Report

ட்விட்டரில் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார் எலான் மஸ்க்.

அதிகம் பயன்படுத்தப்படும் ட்விட்டர் 

வாட்ஸ் - அப்பை போலவே, பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த டிவிட்டரை அதிகமானோர் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும், தெரிந்து கொள்வதற்கும் உபயோகம் செய்து வருகிறார்கள்.

You can now make video calls on Twitter

இந்த டிவிட்டரில் மற்றவர்களுடன் பேசுவதற்கு மெசேஜ் செய்யும் வசதிகள் இருக்கிறது. ஆனால், பயனர்கள் கால் செய்து பேசும் வசதி இல்லை. ஆனால், அதற்கு இனிமேல் கவலை வேண்டாம்.

ஏனென்றால், அதற்கான வசதிகள் விரைவில் வரவுள்ளதாக டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

புதிய அப்டேட் கொடுத்த எலான் மஸ்க் 

இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது ” டிவிட்டரில் இனிமேல் குரல் மற்றும் வீடியோ கால விரைவில் வரும், எனவே உங்கள் ஃபோன் எண்ணைக் கொடுக்காமலேயே உலகில் எங்கிருந்தாலும் அவர்களிடம் பேசலாம்” என அறிவித்துள்ளார்.

You can now make video calls on Twitter

இனிமேல் டிவிட்டரிலும் குரல் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி வருவதால் பயனர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும், நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகள் இருந்தால் அவர்களுடைய கணக்கை நீக்கம் செய்யப்பட போவதாக எலான் மஸ்க் இதற்கு முன்னதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.