எலான் மஸ்கிற்கு செக் வைத்த ட்விட்டர் : ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்துக்கு பங்குதாரர்கள் ஒப்புதல்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு டிவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்வதற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
எலான் மஸ்க் ட்விட்டர்
கடந்த சில மாதங்களாகவே எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க போவதாக வெளியான தகவல் தான் இணையத்தில் ட்ரெண்டிங் என்றே கூறலாம். டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய நிலவரப்படி மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் டிவிட்டரை வாங்குவதற்கு அந்த ஊடக நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதிக பங்குகளை வாங்கிய மஸ்க்
மேலும் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அவை ஒப்பந்தமானது. அதற்கு முன்னதாக டிவிட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாராராக இருந்தார்.

இந்நிலையில், திடீரென டிவிட்டர் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் கடந்த ஜூலை 10-ம் தேதி அறிவித்தார். எலான் மஸ்க் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.
மேலும் ஒப்பந்தத்தின்படி அவர் நிறுவனத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று டிவிட்டரின் வாரியத்தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்தார்.
ஆதரவாக வாக்கு
இந்த விவகாரம் சரவ்தேச வியபார உலகில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் டிவிட்டரை வாங்கும் எலான் மஸ்க்கின் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக அந்நிறுவன பங்குதாரர்கள் வாக்களித்துள்ளனர்.
இந்த நிலையில் எலான் மஸ்க் திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்ததை எதிர்த்து, டெலாவர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் வழக்கறிஞர்கள் போதுமான ஆவணங்களையும், ஆதாரங்களையும் 4 வாரங்களில் தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
இந்த வழக்கு அக்டோபர் 17ம்தேதி டெலாவர் சான்செரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan