கிருஷ்ணரும் அடம் பிடிக்கிறாரா..? உபி முதல்வர் யோகி சூசகமாக சொல்வது புரிகிறதா..?
கிருஷ்ணா ஜென்மபூமியான மதுரா குறித்து சூசகமாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
மதுரா
கிருஷ்ணா ஜென்மபூமியாக கூறப்படும் தற்போதைய உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள மதுரா நகரில் இருந்த கோவிலை இடித்து, மசூதி கட்டப்பட்டதாக அண்மையில் தகவல் வெளிவந்தன.
இதனை இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் வெளியிட்டதில் இருந்து, பலதரப்பட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ள கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்த Chapter...! கிருஷ்ணர் பிறந்த மதுராவில் கோவிலை இடித்து மசூதி கட்டிய முகலாய மன்னர் - இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம்
இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் பேசியது வருமாறு, அயோத்தியில் நடைபெற்ற கொண்டாட்டத்தை பார்த்த நந்தி பாபா, பிடிவாதத்துடன் தடுப்புகளை இரவில் உடைத்தெறிந்துள்ளார்.
தற்போது நமது கிருஷ்ணரும் பிடிவாதமாக உள்ளார்" என உத்தர பிரதேச சட்டமன்றத்தில் யோகி ஆதித்யநாத் பேசியிருக்கின்றார்.